Skip to content

கல்வியின் நோக்கமும், இன்றைய கல்வியும்.

500 க்கு 499, 498 மதிப்பெண்கள், பேட்டிகள், வாழ்த்துகள், என தொலைக் காட்சிக்குத் தீனி போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது இன்றைய கல்வி.

கல்வியின் நோக்கம் மதிப்பெண்களை அதிகமாக எடுப்பதில் இல்லை. மொழி அறிவும், நுட்பமும், சரியான அணுகுதலும், முடிவெடுத்தலும், சோர்வின்றி இயங்குதலும், தடையை படியாக்கி மேலெழுதலிலும், ஒன்றும் இல்லாதததிலிருந்து தொடங்கி அனைத்தும் அடைவதற்கான படிநிலை அமைத்து இயங்குதலிலும், மகிழ்வான, சரியான அறிவுச் சூழலைத் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் அமைத்துக் கொடுத்தலிலும், என்கிற உயரிய பல நுட்ப ஆற்றல்களைப் பெறுவதற்கான படிநிலையே கல்வி.

இன்றைய கல்விமுறையில் இது கானல் நீரே. அடிமைகளை ஆக்க உருவாக்கப்பட்ட இது இன்று மேலும் சுருங்கிப்போய் எதுவுமே தெரியாத அடிமைகளை உருவாக்குகிற செயலில் வெற்றி பெற்றுள்ளது.

என்று உணரும் இந்த மக்கள் கூட்டம். மக்கள் விரும்பினால் தானே சரியான கல்வி கிடைக்கும்.
யாருமற்ற ஏதிலிகளாகப் பெற்றோர்கள் ஏங்கித் தவிக்க இந்தக் கல்விமுறைதான் அடித்தளமானது என்பதை ஓர் நாள் இந்த மக்கள் கூட்டம் உணரும்.

அதுவரை காத்திருப்போம். அன்று சரியான கல்வியை அறிமுகப்படுத்துவோம்.
அன்புடன்
பொள்ளாச்சி நசன்         http://www.thamizham.net        http://www.thamizham.net/thamizhamfm.htm

 

%d bloggers like this: