Skip to content

தமிழே தெரியாதவர்கள் தமிழில் பேச

தமிழே தெரியாதவர்கள் தமிழில் பேசுவதற்கான அடித்தளம் அமைக்கிற படிநிலை இது. நம் தமிழ் மக்கள் பிறரிடம் இதனை பயிற்சி செய்து பார்க்கலாமே. விரும்புகிற உலக மக்கள் தமிழ் படிப்பதற்கான பாடத்திட்டம் ஆக்கி வருகிறேன். அதன் முதல் படி இது.

2016_11_07_14_39_10

பாடம் 1

சூழலில் உள்ள பொருள் = குப்பைத் தொட்டி

1. இது என்ன ? இது குப்பைத் தொட்டி
அது என்ன ? அது குப்பை

2. இது பூந்தொட்டியா ? இல்லை. இது குப்பைத் தொட்டி
இது குப்பைத் தொட்டியா ? ஆம். இது குப்பைத் தொட்டி

3. இது என்ன ? இது குப்பைத் தொட்டி
குப்பைத் தொட்டி எத்தனை உள்ளது ? ஒரு குப்பைத் தொட்டி உள்ளது.
குப்பைத் தொட்டி எங்கு உள்ளது ? குப்பைத் தொட்டி தெருவில் உள்ளது.
குப்பை எப்பொழுது எடுப்பார்கள் ? காலை 10 மணிக்கு குப்பை எடுப்பார்கள்.
குப்பைத் தொட்டி ஏன் உள்ளது ? குப்பைத் தொட்டி குப்பை போட உள்ளது.

4. நான் குப்பைத் தொட்டியில் போடுகிறேன். (போடுவேன்) (போடமாட்டேன்)
நீ குப்பையை எங்கு போடுவாய் ?
இவன் குப்பையை எங்கு போடுவான் ?

5. நாம் குப்பையை எங்கு போடுவோம்.
நீங்கள் குப்பையை தெருவில் போடாதீர்கள்.
இவர்கள் குப்பையை எடுப்பவர்கள்.
6. நான் நேற்று குப்பைத் தொட்டி பார்த்தேன்
நான் இன்று குப்பைத் தொட்டியில் போடுகிறேன்.
நான் நாளை குப்பைத் தொட்டியில் போடுவேன்.
7. குப்பையை கொட்டாதே
குப்பையால் கேடு வரும்
குப்பைக்குத் தீ வைக்காதே
குப்பைத் தொட்டியில் குப்பையைப் போடு
இது யாருடைய குப்பை ? இது என்னுடைய குப்பை.
நான் குப்பையை குப்பைத் தொட்டியில் போடுவேன்.

 

%d bloggers like this: