Skip to content

அகராதி ( சொற்களின் பட்டியல்)

ஓரெழுத்துச் சொற்கள் அதிகமாக உள்ள மொழி தமிழ்மொழி. சொற்களின் பட்டியல்தான் ஒரு மொழியின் வரலாறு காட்டுபவை. சொற்களின் பட்டியலை வெளியிட்ட நூல்களைப் பாதுகாப்பதும், அவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் காட்சிப்படுத்தி அவைபோல இன்றை சூழலில் புதியதாக தொடங்குகிற அனைத்துத் துறைகளுக்கும் சரியான பொருளுடைய சொற்களை உருவாக்கிப் பயன்படுத்திப் பாதுகாப்பது தான் தமிழ் வளர்ச்சிக்கான முதல் படியாக அமையும்.

இந்த நோக்கில் இதுவரை வெளியிட்டுள்ள ( மறைந்து போனவை தவிர்த்து ) அகராதிகளின் பட்டியலை அகரவரிசைப்படுத்தி இத்துடன் இணைத்துள்ளேன். இந்த நூல்களைப் பாதுகாப்பதும், வேறு நூல்கள் இருப்பின் அவற்றைப் பட்டியலில் இணைத்துக் கொள்வதும் நம் முதன்மைப் பணியாகக் கருதி இயங்குவோமாக.

அகத்தியமுநிவர் ஜாலநிகண்டு 200
அடிப்படைத் தமிழ்ச் சொல் அகரமுதலி நிகண்டு
அடுக்குமொழி அகராதி
அபிதான சிந்தாமணி
ஆங்கிலம் மற்றும் தமிழ் அகராதி
ஆசிரிய நிகண்டு (பகுதி 2)
இவை தமிழல்ல அயற்சொல் அகராதி
உரிச்சொல் நிகண்டு
உவமைச் சொல் அகராதி
ஊடக இயல் கலைச்சொல் அகராதி
எதிர்ப்பத அகராதி
எதுகை அகராதி
எழுத்திலக்கணக் கலைச்சொற்பொருள் விளக்க அகராதி
ஒருசொற்பலபொருட்பெயர்த்தொகுதி (பதினோராவது நிகண்டு)
கழகத் தமிழ் அகராதி
கார்த்திகேயினி புதுமுறை அகராதி
காலக்குறிப்ப அகராதி
கிறித்தவ இலக்கிய அகராதி
சட்டச் சொல் அகராதி
சித்த மருத்துவ அகராதி (2 பகுதிகள்)
சிந்தாமணி நிகண்டு
சிந்தாமணி நிகண்டு – மூலமும் உரையும் அகராதியும்
சூடாமணி நிகண்டு
செந்தமிழ் அகராதி
சேந்தன் செந்தமிழ் (வடமொழி தமிழ்ச் சொல் அகராதி)
சைகை மொழி அகராதி தொகுதி 1
சைவ சமய இலக்கிய அகராதி (இரண்டாம் தொகுதி)
சைவ சமய இலக்கிய அகராதி (முதல் தொகுதி)
சைவ சித்தாந்த அகராதி அ.கி.மூர்த்தி (கழகவெளியிடு)
சொல்பொருள் திருக்குறள் தொகை அகராதி
சொல்லிலக்கணக் கலைச்சொற்பொருள்விளக்க அகராதி
சொற்களஞ்சியம் பெருக்க அகராதி
சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதி – Vol. I, Part III
சொற்பொருள் விளக்கம் (அரும்பொருள் விளக்க நிகண்டு)
தமிழ் தொழில்நுட்ப அகராதி
தமிழ் புலவர் அகராதி
தமிழ்ச் சித்த வைத்திய அகராதி
தற்கால தமிழ்ச்சொல் அகராதி
திருக்குறள் அகராதி
துறைதோறும் தெளிதமிழ்ச் சொற்கள் அகராதி (அருளி)
நாமதீப நிகண்டு (சிவசுப்பிரமணியக்கவிராயர்)
பிங்கல நிகண்டு
பொருட்தொகை நிகண்டு
போகமுனிவர் பெருநூல் நிகண்டு 1700
போகர் நிகண்டு 1200
போகர் நிகண்டு கையேடு (பரிபாஷை அகராதியுடன்)
மயங்கொலி அகராதி
மயங்கொலி நிகண்டு
மயங்கொலிச் சொற்பொருள் அகராதி
மலை அகராதி
மானிடவியல் கலைச்சொல் அகராதி
வடமலை நிகண்டு
வணிகவியல் அகராதி
வயித்திய மலை அகராதி
வயித்தியவல்லாதியின் அகராதி
வைத்திய மூலிகை அகராதி
வைத்திய விளக்க அகராதி

தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியம்

தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியம் (88) இன்று காலை இயற்கை எய்திய செய்தி அறிந்து தமிழம்.வலை வருந்துகிறது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டாலும் கூட, தென்காசி ஆலங்குளம் சாலையில், ‘தமிழூர்’ என்ற ஊரை உருவாக்கி, காலமெல்லாம் தமிழுக்கு அரும்பணி ஆற்றிக்கொண்டு இருந்தார். ‘உலகத் தமிழ்க் கல்வி இயக்ககம்’ என்ற அமைப்பை, இறுதி வரை நடத்திக் கொண்டு இருந்தார்.

தமிழ்ச் சித்தர்கள் போன்று, தம்முடைய இல்லத்திலேயே ஒரு கல்லறையை உருவாக்கி, தம்மை அடக்கி அதன்மேல் திருவள்ளுவர் சிலையை வைக்க வேண்டும் என இறுதிமுறி(உயில்) எழுதி வைத்தவர்.

வீரகேரளம்புதூரில் பிறந்த ச.வே.சு., உலகெங்கும் வாழும் தமிழர் உள்ளம் எல்லாம் நிறைந்தவர். அவரது பிரிவால் துயருறும் தமிழ் உணர்வாளர்களுக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்த 32 அட்டைகள் புத்தக வடிவில்

அன்பு நண்பருக்கு
வணக்கம், இத்துடன் ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்த 32 அட்டைகளை (முதல் நிலைக்கு உரியது) புத்தக வடிவில் ஆக்கி இத்துடன் இணைத்துள்ளேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி spanish.exe என்ற அந்தக் கோப்பினை இறக்கவும்

http://win.tamilnool.net/spanish.exe

spanish.exe என்ற அந்த கோப்பைச் சொடுக்கினால் ஒரு பக்கம் திறக்கும். அந்தப் பக்கத்தில் கீழே உள்ள book mark என்ற பகுதியைச் சொடுக்கினால் புத்தகம்
தோன்றும். புத்தகத்தின் வலது மூலையைச் சொடுக்கினால் பக்கம் திரும்பும். ஆங்கிலத்திற்கு அடுத்த படியாக அதிக மக்கள் பயன்படுத்துகிற மொழி ஸ்பானிஷ் எனவே இந்த மொழி தெரிந்தவர்கள் தமிழ் படிக்க இந்தப் புத்தகம் உதவும் என்று நம்புகிறேன். அருள்கூர்ந்து விரும்புகிற நண்பர்களுக்கு இதனை அனுப்பி வைக்கவும்
அன்புடன்
பொள்ளாச்சி நசன் – pollachinasan@gmail.com
web : http://www.thamizham.net ? phone : 9788552061
(பிரச்சனை இருந்தால் அருள்கூர்ந்து தகவல் தரவும்)

பரிசும் பாராட்டும் …….

பாராட்டுச் சான்றிதழ், கவிதைப் போட்டியில் முதல் பரிசு, பட்டாடை அணிவிப்பு, தலையில் தங்கநிற கிரீகிடம், ஆளுயர மாலை, பதக்கம், பரிசு, பாராட்டு மழை, தமிழின் தலைசிறந்த கவிஞன், ஆய்வாளன் என்று கழுத்தில் மாட்டிக் கொள்ளுதல், நூல்கள் வெளியீடு என்று வெளியிட்டு மகிழ்தல், வகை வகையான பட்டங்கள், அலங்கரித்த மேடைகள், அனைவருக்கும் இனிப்பு, உணவு, என ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் ஏன் இந்த ஆர்ப்பாட்டம். கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்.
இன்றைய தலைமுறையினருக்குத் தமிழ் இல்லை.
தமிழ்ப் பண்பாடும் இல்லை. ஆங்கிலவழி என்கிறான். ஆங்கிலமும் இல்லை. இரண்டும் கெட்டானாய் 20 ஆண்டுகள் கழிக்கிறான். உங்கள் எழுத்துகளைப் படிக்க ஆளில்லை. உங்களுக்கு எதற்கு பரிசும் பாராட்டும்.?
கீழே இறங்கி வாருங்கள். உங்களால் ஒருவராவது நல்ல தமிழ் அறிஞராக மாறட்டும். அடுத்த தலைமுறையினரை வளர்த்தெடுங்கள். உங்கள் அறிவுடைமை இவ்வுலகின் ஒரு மன்னுயிருக்காவது இனியதாக அமையட்டும்.

பெருஞ்சித்திரனார் உரை கேட்கவும்

எத்தனை பேர் பெருஞ்சித்திரனார் அவர்களின் உரையைக் கேட்டுள்ளீர்கள் ?
அவரது மூன்று நிமிட உரையே ஒவ்வொருவரையும் உரசி தமிழ்த் துடிப்போடு மேலெழச் செய்யும். கேட்டவர்களில் எத்தனை பேர் உள்வாங்கி இருக்கிறீர்கள் ? உள்வாங்கியிருந்தால் எத்தனை பேர் செயல்பட அணியமாக இருக்கிறீர்கள் ?
நான் கேட்கவே இல்லை என்பவர்கள் உங்களது ஆன்டிராய்டு கைபேசியில் – பிளேஸ்டோர் வழி – மென்பொருளை இறக்கி – கேட்கலாமே. இணைக்கப்பட்டுள்ள படம் பார்க்கவும்.
கணினி வழியாக இணையம் கேட்பவராக இருந்தால் கீழுள்ளதைச் சொடுக்கவும். மென்பொருளை இறக்கி நிறுவிக் கொண்டு ஓய்வாக உள்ள பொழுதில் கேட்கவும்.
http://www.thamizham.net/thaa.htm

பேச்சுத் தொடர்களை உங்களால் வரிசைப்படுத்த இயலுமா?

மொழி என்பது அப்பகுதி மக்களோடு தொடர்பு கொள்ள உதவுவது. இந்தத் தொடர்புக்கு அடிப்படையாக அமைகிற பேச்சுத் தொடர்களை உங்களால் வரிசைப்படுத்த இயலுமா? இயலுமாயின் வரிசைப்படுத்தவும். சனவரி 2017 முதல் வாரத்திற்குள் அந்தத் தொடர்களை தட்டச்சு செய்து மின்அஞ்சல் செய்யவும். சரியாக வரிசைப்படுத்துபவர்கள் நான் உருவாக்கும் பாடத்திட்டத்தில் இடம் பெறுவீர்கள்.
பொள்ளாச்சி நசன் – pollachinasan@gmail.com

speech

32 அட்டைகள் புத்தக வடிவில்

32 அட்டைகளைக் கணினியில் படிக்கக்கூடிய புத்தக வடிவில் உருவாக்கி உள்ளேன்.

கீழுள்ள இணைப்பில் உள்ள கோப்பை இறக்கி,  Unzip  செய்தால் 32 B என்கிற கோப்பு கிடைக்கும். அதைச் சொடுக்கி அதில் உள்ள book mark  என்ற பொத்தானைச் சொடுக்கினால் புத்தகம் தோன்றும். புத்தகத்தைத் திருப்பிப் படிக்கலாம். கணினியில் நிறுவி படிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இந்த கோப்பினை ஆசிரியர்கள் கணினியில் நிறுவி மாணவர்களை இயக்க வைத்து படிக்க ஊக்குவிக்கவும்.

32 அட்டைகளை எப்படி நடத்துவது என்பதை எனது யு டியூப் காணொனி வழியாகக் கண்டு அதன் வழி மாணவர்களைப் பயிற்றுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்