Skip to content

கனியிருப்பக் காய்கவர்ந்தற்று….

எது கனியென நான்கு தலைமுறைமுறையினராக யாருக்குமே சொல்லித்தரவில்லை. பின் எப்படி காய் தின்பவனை நோகமுடியும். எனக்கு எல்லாம் தெரியும். எனக்குத் தெரியாதது எது? யார் சொல்லி நான் கேட்க வேண்டும். நான் சாப்பிடுகிறேன். பதவியில் இருக்கிறேன். மகிழ்வாக வாழ்கிறேன். எனக்கு என்ன குறை? நான் எதற்கு ஆய்ந்து ஆய்ந்து தேட வேண்டும்.

ஒவ்வொருவரும் அவரவர் நிலையிலிருந்தே அனைத்தையும் பார்த்து அதையே பேசி, விளக்கி, விமர்ச்சித்து, இறுதிவரை வாழ்ந்து இறந்தும் போய்விடுகின்றனர்.

உட்கருவின் குரோமோசோம்களில் பல தலைமுறைக்கு முன்பு வீரியமாக இருந்து, இன்று அதன் தொடரியாக மிகச் சரியாகச் சொன்னாலும், அதைச் சரி என்று அவர் போலவே உள்வாங்கிச் சொல்லுகிற மக்கள் கூட்டம் இல்லாமையால் அவர் சொன்னது அப்படியே இருந்து, இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. மறைமலை, பாவாணர், பெருஞ்சித்திரனார் என்போர் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்தவை கூட வெறும் சொற்களாகவே முடங்கிக் கிடக்கின்றன. அன்றைய சூழலில் அவர்களால் இயன்றவரை, இறுதிவரை இயங்கிப் பதிவு செய்துள்ளார்கள். ஆனால் இன்றைய சூழலில் அவர்கள் கண்டறிந்தவைகளை அப்படியே புரட்டிப் போட்டு ஒரே நாளில் மாபெரும் மலையை உருவாக்கி உலகுக்கே காட்ட இயலும்.

இணையமும், தேடுபொறியும், மின்நூல்களும், ஒரு நொடியில் உலகையே சென்றடையவைத்து அறிவேற்றம் செய்ய இயலும். எம் தமிழ் மக்கள், தனித்தனித் தீவுகளாக நிற்கிறார்கள். கணினி எனக்குத் தெரியாது என்றும், விலகியே நிற்கிறார்கள். இன்றைய சூழலில் நாம் திட்டமிட வேண்டியது 3 நிலைகளில் உள்ளன.

1) விரும்புகிறவர்களுக்குத் தமிழ் கற்பித்து அவர்களை தெளிதமிழுடன் எழுதுகிற ஆற்றலுள்ள தமிழாளர்களை பயிற்சி கொடுத்து ஆக்குதல், பரப்புதல், படிக்க வைத்தல் ( இதற்கு ஆசிரிய மனநிலை உடையவர்கள் + கணினி தொடர்பாக வடிவமைப்பவர்கள் + கணினியில் இயங்குபவர்கள் வேண்டும் )

2) தமிழின் அனைத்து ஆக்கங்களையும் (அகராதி, இலக்கணம், இலக்கியநூல்கள் ) 19 ஆம் நூற்றாண்டுவரை வெளிவந்தவைகளைப் பட்டியலிடுவதும், அதனைப் பாதுகாப்பதும் அடங்கும் ( இதற்கு கணினியை இயக்கத் தெரிந்து, தன் நேரத்தை ஒதுக்கி இயங்குபவர்களும் வேண்டும் )

3) தமிழ்க் கல்வி = தமிழின் மொழிப் புலமை + தமிழ்க்கலையின் அறிமுகமும் நுட்பம் உணர்தலும். அன்றைய சூழலில் 64 கலைகள் இருந்தன. இன்றைய சூழலில் கலைகளின் பட்டியல் 100க்கு மேற்படும். அன்றைய பட்டியலில் யானைஏற்றம், குதிரையேற்றம் இருந்தன. இன்று சரக்குந்து ஏற்றம், துள்ளுந்து ஏற்றம் என்று மாற்றி அது தொடர்பான அனைத்தையும் தமிழில் ஆக்கி படித்து இயங்க படி அமைக்க வேண்டும். (உலகம் முழுவதும் கண்டறிந்த கலைகள் அனைத்தையும் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து முதலில் அடிப்படை அறிவையும் அதன் தொடரியாக ஆழ்நிலை அறிவையும் அறிய வகை செய்ய வேண்டும்) (மொழிபெயர்த்து எழுதுகிற ஆற்றலுள்ளவர்கள் எழுதலாம்.) (100 பக்கங்களுக்கு மிகாத எந்த நூலையும் தமிழம்.வலை தன்னுடைய சொந்த செலவிலேயே அச்சாக்கித்தர விரும்புகிறது,) (கதை எழுதாமல் கருத்து விளக்க வரிகளாக இருந்தால் அந்த நூல் வணங்குதற்குரியதாகும்)

எனவே ஆய்ந்து ஆய்ந்து கொள்ளுகிற ஆற்றலுள்ள நம் தமிழ் மக்கள் கூட்டத்தை உருவாக்குவோம்.

அன்புடன்
பொள்ளாச்சி ம.நடேசன் – தமிழம்.வலை – தமிழம்.பண்பலை – தமிழ்கல்வி (www.tamillearning.in)
தொடர்புக்கு : 9788552061 Skype ID : pollachinasan1951 Mail ID : pollachinasan@gmail.com

திண்னைப் பள்ளி – தமிழ்க் கல்வி

ஒருவன் ஒரு மொழியைக் கற்றுக் கொள்கிறான்
என்றால் அந்த மொழி அவனுக்குப்
பேசவும், எழுதவும்,
தான் நினைப்பதை வெளிப்படுத்தவும்,
எப்படி உலகில் வாழவேண்டும் என்பதையும்
அவனுக்குக் கற்றுத்தரும்.

அப்படிக் கற்பதுதான் கல்வி. அப்படிக்
கற்றவருக்குத்தான் சென்றஇடமெல்லாம்
சிறப்பு மிகும். இத்தகையை கல்வியைத்தான்
நான்கு தலைமுறைக்கு முன் இருந்த
திண்னைப் பள்ளி கற்றுத்தந்தது.
தமிழ் இப்படித்தான் கற்பிக்கப்பட்டது.
எப்படி உலகில் வாழவேண்டும் என்பதை
ஆசிரியரோடு வாழ்ந்து கற்றனர்.

கல்வி = மொழிப்புலமை + கலை அறிவு.

கல்வி = எழுத, படிக்க, பேச, வெளிப்படுத்த
– அகராதியும், இலக்கணமும் கற்றுத்தர –
எப்படி வாழவேண்டும் என்பதைச் சங்கத் தமிழ்
இலக்கியங்கள் (திருக்குறள்) கற்றுத்ததந்தன.
+
அத்துடன் 64 கலைகளுக்கான அறிமுகத்தையும்
வேண்டிய கலையின் நுட்பத்தையும் கற்றுத்தருவது.

(இன்றைய சூழலில் 64 க்கு மேற்பட்ட கலைகள்
உள்ளன. இவைகளைத் தமிழில் உள்வாங்கி,
நூலாக்கி, கற்றுத்தர படிநிலை அமைக்கவேண்டும்)

ஆங்கிலேயன் இங்கு வந்ததும் அவன் கண்டு
வியந்தது 1) மாடு 2) கல்விமுறை
மாட்டிற்காக வதைக்கூடத்தையும்,
கல்விக்காக மெக்காலே உருவாக்கிய கல்விக்
கூடத்தையும் அமைத்தான்.

தமிழ்க் கல்வியைத் தரமாக்கத் திட்டமிடுவோம்

நான் 25 ஆண்டுகால ஆசிரியப் பயிற்சியில்
கண்டறிந்தவை அனைத்தையும் கீழுள்ள
பக்கத்தில் இணைத்துள்ளேன். பார்க்கவும்.

http://www.thamizham.net/kal/tamil.htm

வள்ளுவர் வேண்டுமா? வேண்டாமா?

மக்களுக்காக வள்ளுவர் சொன்னது

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

இன்று நடப்பது………….

இன்னாசெய் தாரை ஒறுத்தல் பிறர்காண
தொடரின்னா தேடிச் செயல்.

எப்படி மாறிப்போனது மக்களினம் ?

வள்ளுவர் வேண்டுமா ? வேண்டாமா ?

ஆஸ்திரேலிய வானொலி நேர்காணல்

30 நாள்களில் தமிழ் படிக்கலாம். ஆஸ்திரேலிய பண்பலையில் எனது நேர்காணல் இது – பொள்ளாச்சி நசன் – http://www.thamizham.net

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/tmilll-teriyaatvrum-30-naallil-tmilll-peeclaam-elllutlaam?language=ta

 

அகராதி ( சொற்களின் பட்டியல்)

ஓரெழுத்துச் சொற்கள் அதிகமாக உள்ள மொழி தமிழ்மொழி. சொற்களின் பட்டியல்தான் ஒரு மொழியின் வரலாறு காட்டுபவை. சொற்களின் பட்டியலை வெளியிட்ட நூல்களைப் பாதுகாப்பதும், அவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் காட்சிப்படுத்தி அவைபோல இன்றை சூழலில் புதியதாக தொடங்குகிற அனைத்துத் துறைகளுக்கும் சரியான பொருளுடைய சொற்களை உருவாக்கிப் பயன்படுத்திப் பாதுகாப்பது தான் தமிழ் வளர்ச்சிக்கான முதல் படியாக அமையும்.

இந்த நோக்கில் இதுவரை வெளியிட்டுள்ள ( மறைந்து போனவை தவிர்த்து ) அகராதிகளின் பட்டியலை அகரவரிசைப்படுத்தி இத்துடன் இணைத்துள்ளேன். இந்த நூல்களைப் பாதுகாப்பதும், வேறு நூல்கள் இருப்பின் அவற்றைப் பட்டியலில் இணைத்துக் கொள்வதும் நம் முதன்மைப் பணியாகக் கருதி இயங்குவோமாக.

அகத்தியமுநிவர் ஜாலநிகண்டு 200
அடிப்படைத் தமிழ்ச் சொல் அகரமுதலி நிகண்டு
அடுக்குமொழி அகராதி
அபிதான சிந்தாமணி
ஆங்கிலம் மற்றும் தமிழ் அகராதி
ஆசிரிய நிகண்டு (பகுதி 2)
இவை தமிழல்ல அயற்சொல் அகராதி
உரிச்சொல் நிகண்டு
உவமைச் சொல் அகராதி
ஊடக இயல் கலைச்சொல் அகராதி
எதிர்ப்பத அகராதி
எதுகை அகராதி
எழுத்திலக்கணக் கலைச்சொற்பொருள் விளக்க அகராதி
ஒருசொற்பலபொருட்பெயர்த்தொகுதி (பதினோராவது நிகண்டு)
கழகத் தமிழ் அகராதி
கார்த்திகேயினி புதுமுறை அகராதி
காலக்குறிப்ப அகராதி
கிறித்தவ இலக்கிய அகராதி
சட்டச் சொல் அகராதி
சித்த மருத்துவ அகராதி (2 பகுதிகள்)
சிந்தாமணி நிகண்டு
சிந்தாமணி நிகண்டு – மூலமும் உரையும் அகராதியும்
சூடாமணி நிகண்டு
செந்தமிழ் அகராதி
சேந்தன் செந்தமிழ் (வடமொழி தமிழ்ச் சொல் அகராதி)
சைகை மொழி அகராதி தொகுதி 1
சைவ சமய இலக்கிய அகராதி (இரண்டாம் தொகுதி)
சைவ சமய இலக்கிய அகராதி (முதல் தொகுதி)
சைவ சித்தாந்த அகராதி அ.கி.மூர்த்தி (கழகவெளியிடு)
சொல்பொருள் திருக்குறள் தொகை அகராதி
சொல்லிலக்கணக் கலைச்சொற்பொருள்விளக்க அகராதி
சொற்களஞ்சியம் பெருக்க அகராதி
சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதி – Vol. I, Part III
சொற்பொருள் விளக்கம் (அரும்பொருள் விளக்க நிகண்டு)
தமிழ் தொழில்நுட்ப அகராதி
தமிழ் புலவர் அகராதி
தமிழ்ச் சித்த வைத்திய அகராதி
தற்கால தமிழ்ச்சொல் அகராதி
திருக்குறள் அகராதி
துறைதோறும் தெளிதமிழ்ச் சொற்கள் அகராதி (அருளி)
நாமதீப நிகண்டு (சிவசுப்பிரமணியக்கவிராயர்)
பிங்கல நிகண்டு
பொருட்தொகை நிகண்டு
போகமுனிவர் பெருநூல் நிகண்டு 1700
போகர் நிகண்டு 1200
போகர் நிகண்டு கையேடு (பரிபாஷை அகராதியுடன்)
மயங்கொலி அகராதி
மயங்கொலி நிகண்டு
மயங்கொலிச் சொற்பொருள் அகராதி
மலை அகராதி
மானிடவியல் கலைச்சொல் அகராதி
வடமலை நிகண்டு
வணிகவியல் அகராதி
வயித்திய மலை அகராதி
வயித்தியவல்லாதியின் அகராதி
வைத்திய மூலிகை அகராதி
வைத்திய விளக்க அகராதி

தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியம்

தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியம் (88) இன்று காலை இயற்கை எய்திய செய்தி அறிந்து தமிழம்.வலை வருந்துகிறது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டாலும் கூட, தென்காசி ஆலங்குளம் சாலையில், ‘தமிழூர்’ என்ற ஊரை உருவாக்கி, காலமெல்லாம் தமிழுக்கு அரும்பணி ஆற்றிக்கொண்டு இருந்தார். ‘உலகத் தமிழ்க் கல்வி இயக்ககம்’ என்ற அமைப்பை, இறுதி வரை நடத்திக் கொண்டு இருந்தார்.

தமிழ்ச் சித்தர்கள் போன்று, தம்முடைய இல்லத்திலேயே ஒரு கல்லறையை உருவாக்கி, தம்மை அடக்கி அதன்மேல் திருவள்ளுவர் சிலையை வைக்க வேண்டும் என இறுதிமுறி(உயில்) எழுதி வைத்தவர்.

வீரகேரளம்புதூரில் பிறந்த ச.வே.சு., உலகெங்கும் வாழும் தமிழர் உள்ளம் எல்லாம் நிறைந்தவர். அவரது பிரிவால் துயருறும் தமிழ் உணர்வாளர்களுக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்த 32 அட்டைகள் புத்தக வடிவில்

அன்பு நண்பருக்கு
வணக்கம், இத்துடன் ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்த 32 அட்டைகளை (முதல் நிலைக்கு உரியது) புத்தக வடிவில் ஆக்கி இத்துடன் இணைத்துள்ளேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி spanish.exe என்ற அந்தக் கோப்பினை இறக்கவும்

http://win.tamilnool.net/spanish.exe

spanish.exe என்ற அந்த கோப்பைச் சொடுக்கினால் ஒரு பக்கம் திறக்கும். அந்தப் பக்கத்தில் கீழே உள்ள book mark என்ற பகுதியைச் சொடுக்கினால் புத்தகம்
தோன்றும். புத்தகத்தின் வலது மூலையைச் சொடுக்கினால் பக்கம் திரும்பும். ஆங்கிலத்திற்கு அடுத்த படியாக அதிக மக்கள் பயன்படுத்துகிற மொழி ஸ்பானிஷ் எனவே இந்த மொழி தெரிந்தவர்கள் தமிழ் படிக்க இந்தப் புத்தகம் உதவும் என்று நம்புகிறேன். அருள்கூர்ந்து விரும்புகிற நண்பர்களுக்கு இதனை அனுப்பி வைக்கவும்
அன்புடன்
பொள்ளாச்சி நசன் – pollachinasan@gmail.com
web : http://www.thamizham.net ? phone : 9788552061
(பிரச்சனை இருந்தால் அருள்கூர்ந்து தகவல் தரவும்)